எனக்கு கீ போர்டு கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. எப்போ நான் அழகன் படத்துல வரும் சங்கீத ஸ்வரங்கள் பாடல் கேட்டேனோ அதுல இருந்தே ரொம்ப ஆசை. இத்தனை வருஷ கனவை நனவாக்கலாம்னு என் நெருங்கின தோழி கிட்ட சொன்னேன், கீ போர்டு கத்துக்க போகணும், எங்க போயி கத்துக்கலாம்னு கேட்டேன். ஒடனயே அவங்க யாருக்கு, ஸ்ரேயா க்கா ன்னு கேட்டாங்க... நான் சொன்னேன், இல்ல, எனக்கு தான்... நீயா கத்துக்க போற... உனக்கு தேவையா ன்னு கேட்டாங்க... சரி. இவங்க தான் இப்படி சொல்லிட்டாங்க... யாரு கிட்ட கேக்கலாம்னு யோசிச்சு யோசிச்சு கேட்டேன் பாருங்க...வேற யாரு கிட்டயும் இல்ல... என் வாழ்கை துணை கிட்ட தான்... என்ன கீ போர்டு ஆ?? யாருக்கு ஸ்ரேயா கு தான?? சரி. சரி. ஓகே. சேர்த்து விடு. இதுல என்ன இருக்கு ன்னு சொன்னாரு... ஐயோ.... இல்லப்பா... எனக்கு தான் கத்துக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு, எத்தனையோ வருஷ கனவு இது ன்னு சொன்னப்புறம்...வேற எதாவது உருப்படியா பேசரியான்னு கேட்டு ரொம்பவே அப்செட் பண்ணிட்டாரு....இவங்கள எல்லாம் விட்டுடலாம் நு சொல்லிட்டு,ஊர்ல இருக்கற என் ஒரே தம்பிக்கு போன் போட்டு கேட்டேன்... தம்பி, உனக்கு தெரியும்ல எனக்கு கீ போர்டு மேல அவ்ளோ ஆசைன்னு... அதனால ன்னு நான் சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடி அவன் கேட்டான், ஒ..அதனால ஸ்ரேயா குட்டி யா சேர்க்க போறியான்னு.... ரொம்பவே வெறுத்து போயி...இவங்க யாரு கிட்டயும் கேக்க வேண்டாம்னு முடிவு செய்து அக்கம் பக்கத்துல விசாரிச்சு ரெண்டு தெரு தள்ளி இருக்கற ஒருத்தரை போயி (அவரு லைட் மியூசிக்கில் அருமையா கீ போர்டு வாசிப்பவர்) பார்த்து கேட்க போனேன்... போறவ தனியா போயிருக்க மாட்டேனா... போதும்போது எனக்கு வாயிச்சிருக்கே ஒரு அறுந்தவால்...அதையும் கூட்டிகிட்டு போனேன்....போயி சேர்ந்த ஒடனே...அவரு என்னங்க கீ போர்டு கிளாஸ் ஆ...ஓகே... ன்னு சொல்லிட்டு... ஸ்ரேயா வை பார்த்து... பாப்பா... உனக்கு மியூசிக் பிடிக்குமா? கீ போர்டு வாசிக்கணும்னு உனக்கு எப்படி ஆர்வம் வந்துது ன்னு அவளை கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாரு... இதை பார்த்த நான் எவ்வளவு டென்ஷன் ஆயிருப்பேன்னு யோசிச்சு பாருங்க... நான் ரொம்பவே மனசு ஒடிஞ்சு போயிட்டேன்...சார்... நான் கேக்க வந்தது நான் கீ போர்டு கத்துக்கணும்னு தான்... அவ கத்துக்கரதுக்காக இல்லன்னு சொல்லிட்டு வீடு வந்து சேர்ந்தேன்....இத்தனை பேரு என்னை demotivate பண்ணினப்புரமும் எனக்கு கீ போர்டு ஆசை விடலேன்னா பாத்துக்கங்களேன்.... கண்டிப்பா இந்த மாத முடிவுக்குள்ள கீ போர்டு கிளாஸ் சேர்ந்து ஜனவரி ல என் பிறந்த நாளுக்கு ஹாப்பி பர்த்டே டு மீ ன்னு நான் கீ போர்டு வாசிக்கலைனால் என் பேரை மாதிக்கங்கன்னு சவால் விட்டிருக்கேன்... ஹ்ம்ம்... பாக்கலாம்...
இதுல இருந்து நான் என்ன சொல்ல வரேன்னா... எதையுமே கத்துக்கறதுக்கு வயசு ஒரு தடை கிடையாது... நமக்கு எப்போ வசதிப்படுதோ, அப்போ நமக்கு பிடிச்சத கத்துக்கலாம்.... வயது எதற்குமே தடை கிடையாது....
Who am I
17 December 2008
Subscribe to:
Post Comments (Atom)


13 comments:
don't worry
we shall name it
\\எனக்கு கீ போர்டு கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை\\
கீ போட்டு இல்லாமலா தட்டச்சுறீங்க
u can rock the "jass" in your key-board
best wishes.
ஹை ஜாஸ் தமிழ்ல பதிவு போட ஆரம்பிச்சுட்டிங்களே. ரொம்ப தேங்க்ஸ். இனி பாருங்க் எங்க கச்சேரியை.
நீங்க இப்படி கேட்டு இருக்கலாம் ஜாஸ். நான் கத்துக்கிறேன் இல்லாட்டி பிரியா கத்துகிட்டு வந்து வாசிக்கிறேன் சொல்றான்னு.
உடனே ரெண்டு பேரும் அலறி அடிச்சு ஒ.கே. சொல்லியிருப்பாங்க.
//எதையுமே கத்துக்கறதுக்கு வயசு ஒரு தடை கிடையாது... நமக்கு எப்போ வசதிப்படுதோ, அப்போ நமக்கு பிடிச்சத கத்துக்கலாம்.... வயது எதற்குமே தடை கிடையாது....//
அதனாலதான் நான் இந்த சின்ன வயசிலேயே பதிவு எல்லாம் எழுதறேன் பாருங்க
நீங்க கண்டிப்பா கீ போர்டு வாசிக்க போறீங்க ஜாஸ் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
ரொம்ப சரியா சொன்னீங்க, எதையும் கத்துக்க வயசு தடை இல்ல தான். எனக்கு கூட என் மகன்கள் school போனப்புறம் இப்பொல்லாம் நல்லா டைம் கிடைக்குது studies continue பண்ணலாம்னா இந்த மாதிரி தான் சொல்றாங்க. யார் கிட்டயும் permission கேட்காதீங்க join பண்ணிட்டு information குடுங்க. ஜன்வரில உங்க birthday ல நீங்க keyboard வாசிச்சு அந்த photos உங்க blog ல போடணும் ok ya?
jamaal... thanks for the visit....
ohh..will u name it??? but, how to name it??? hahah....
key board illama thaan naan paadaama irukken jamaal....hehehe...
thanks for your wishes..
priya....yeah..thamizh la padhivu poda aarambichitten...thamizh typing thaan namakku konjam thadhinginathom..athu thaan....
aahaa...priya...naan solla marandhutten...priya voda key board talent pathi......hahahha....
aamaaa...priya....ungalukku ippo thaana sweet 16...atha naan marandhutten paa....
g3....yeahh...yaar kittayum permission kekka vendaam....jes information kuduthaa pothum.....
etho avasarathula savaal vittutten g3... key board class ku enga poradhunnu enakku theriyala.....howwwwwwwwwwwwwwwwwwwww........(vadivel cry....)
enga veetu kitta sollitharaanga vareengala?
ஏன் இப்படி!? ஒரு கீபோர்டை அழ வைக்கறதுல இத்தனை ஆசையா!? பாவம் எந்த கீ போர்ட் மாட்டப் போகுதோ...!? :D :D
Post a Comment